அரசியல்இந்தியாஉலகம்

மாலத்தீவில் பாலம் கட்ட 3,750 கோடி ரூபாய் கொடுக்கும் இந்தியா- வெளியுறவுத்துறை அறிவிப்பு !

மாலத்தீவில் 6.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட பாலம் கட்டும் திட்டத்துக்கு 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைத்துள்ள மாலத்தீவு, இந்தியாவுடன் நெருங்கிய நட்புணர்வு கொண்ட நாடுகளில் ஒன்றாகும். ஆனால் சில ஆண்டுகளாக சீனா மாலத்தீவுடன் நெருங்கி வருகிறது. அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ‌ஷாகித்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாலத்தீவில், உள்கட்டமைப்பை பலப்படுத்த 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். மாலத்தீவு-இந்தியா இடையே வழக்கமான கப்பல் போக்குவரத்து தொடரும் என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Related Articles

3 Comments

  1. You can definitely see your skills within the work you write.
    The sector hopes for more passionate writers like you who are not afraid to say how they believe.
    Always go after your heart.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button