சென்னைதமிழ்நாடு

பாஜகவில் இணைந்த மற்றொரு பெண் பிரபலம்!

மனித உரிமைக் களங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த லூர்து செல்வம் என்பவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் இருந்த காலகட்டத்தில், பெண்கள் மீதான பார்வை அக்கட்சியின் பக்கம் திரும்பியது.

தொடர்ந்து நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் இணைந்ததோடு, தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளராக விளங்கிய லூர்து செல்வம், அண்மையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதோடு, தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர்,  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவள் நான். எனது தந்தை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். திராவிட கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர். தற்போது நான் பாஜகவில் களப்பணியாற்றி வருகிறேன். நாட்டிற்காக தன்னலமற்று உழைக்கும் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் இணைந்திருக்கிறேன்.
21ஆம் நூற்றாண்டின் சாணக்கியராக அமித்ஷா திகழ்கிறார். பல கட்சிகள் இருந்தாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக இருக்கிறது பாஜக.
மதிப்பிற்குரிய அமைச்சர்கள், நிர்மலா சீத்தாராமன், ஸ்மிருதி இராணி போன்றவர்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமே இதற்கு உதாரணம்.

இண்டர்நேஷனல் ஹிந்து சேனா அமைப்பின் மகளிர் பிரிவான சர்வதேச துர்கா சேனா கவுன்சில் மாநில துணை அமைப்பாளராகவும் தேசத்திற்காக பணியாற்றி வருகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button