அரசியல்இந்தியா

கலவரத்தில் ஹிந்து கோவிலை காத்த இஸ்லாமியர்கள்- பின்னணி என்ன ?

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன், ஒரு மதத்தை சேர்ந்தவர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், புலிகேசி நகரில் உள்ள எம்.எல்.ஏ. வீட்டின் முன்கூடி வன்முறையில் ஈடுபட்டனர். வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடைத்த அந்த கும்பல், கற்களை வீசியும், வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, எம்.எல்,.ஏ. சீனிவாச மூர்த்தி மற்றும் தங்கையின் மகன் நவீனும், அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து, அந்த கும்பல், காவல் நிலையத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இதனையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இருவர் உயிரிழந்துனர். காயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வன்முறை காரணமாக டி.ஜே.ஹல்லி மற்றும் கே.ஜி.ஹல்லி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்துள்ளதாக காவல் ஆணையர் கமல் பந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் கலவரக்காரர்கள் அந்த பகுதியில் கடைகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கும் சம்பவத்தை கேள்விப் பட்ட அந்த பகுதி இஸ்லாமியர்கள் அந்த பகுதியில் இருந்த ஹிந்து கோவிலை கலவரக்காரர்களிடமிருந்து காக்கும் பொருட்டு அந்த ஹிந்து கோவிலை சுற்றி கைகளினால் மனித சங்கிலி அமைத்தனர். இதனை கண்ட அந்த பகுதி ஹிந்து மக்களும் இந்த மனித சங்கிலியில் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் அங்கு இருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Articles

9 Comments

 1. Appreciating the time and energy you put into your site and in depth information you offer. It’s great to come across a blog every once in a while that isn’t the same old rehashed material. Great read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

 2. Whats up very nice site!! Guy .. Beautiful .. Amazing .. I’ll bookmark your site and take the feeds alsoKI am happy to find numerous useful info here in the publish, we’d like work out extra techniques on this regard, thank you for sharing. . . . . .

 3. Excellent blog! Do you have any recommendations for aspiring writers?
  I’m planning to start out my very own website soon but I’m just a little
  lost on everything. Could you advise beginning with a totally free platform like WordPress or go for a paid option? There are
  plenty of choices on the market that I’m completely confused ..
  Any ideas? Many thanks!

  My site RonnieBBance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button