இந்தியாகர்நாடகாகவர் ஸ்டோரிகிரைம்

எம்.எல்.ஏ. வீட்டை சூறையாடி வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறை கும்பல் அட்டூழியும் – போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன், ஒரு மதத்தை சேர்ந்தவர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து சமூக வலைதளத்தில் பதவிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், புலிகேசி நகரில் உள்ள எம்.எல்.ஏ. வீட்டின் முன்கூடி வன்முறையில் ஈடுபட்டனர். வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடைத்த அந்த கும்பல், கற்களை வீசியும், வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, எம்.எல்,.ஏ. சீனிவாச மூர்த்தி மற்றும் தங்கையின் மகன் நவீனும், அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து, அந்த கும்பல், காவல் நிலையத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இதனையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,  இருவர் உயிரிழந்துனர். காயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வன்முறை காரணமாக டி.ஜே.ஹல்லி மற்றும் கே.ஜி.ஹல்லி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  மேலும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்துள்ளதாக காவல் ஆணையர் கமல் பந்த் தெரிவித்தார்.

பெங்களூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டை சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

7 Comments

  1. Hello, Neat post. There is an issue together with your web site in web explorer, would test this?K IE nonetheless is the market leader and a large component of people will miss your wonderful writing due to this problem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button