அரசியல்இந்தியாகவர் ஸ்டோரி

அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்த காங்கிரஸ் – அதிர்ச்சியில் பா.ஜ.க.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை சச்சின் பைலட் தனியார் சொகுசு விடுதியில் தங்கவைத்தார்.

மேலும், ஆட்சி நடத்த அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை இல்லை என்று அவர் கூறி வந்த நிலையில்,  தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைவதாகவும் தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில்,  திடீர் திருப்பமாக சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை  நேரில் சந்தித்தார். அப்போது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பிரச்சனைகளுக்கு தீர்வுகான காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  இந்தக்குழுவில் கேசி வேணுகோபால், பிரியங்கா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், மோதல் போக்கை கைவிட்டுவிட்டு சச்சின் பைலட் சமரசத்துக்கு முன் வந்துள்ளதால் வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிப்பதில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எந்த சிக்கலும் இருக்காது எனத் தெரிகிறது.

இதன் மூலம் ராஜஸ்தான் அரசியலில் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

10 Comments

  1. You really make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand. It seems too complex and extremely broad for me. I’m looking forward for your next post, I’ll try to get the hang of it!

  2. Thanks so much for giving everyone remarkably remarkable chance to discover important secrets from this website. It can be so pleasurable and also full of fun for me and my office mates to search the blog minimum three times weekly to study the fresh items you have got. Of course, I am at all times astounded with all the surprising tactics you give. Some 3 tips in this article are without a doubt the very best I’ve ever had.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button