கிரைம்தமிழ்நாடுமதுரைமாவட்டம்

மனைவி தீக்குளித்து தற்கொலை – காப்பாற்ற முயன்ற கணவர், குழந்தைகள் பலத்த தீக்காயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு கனி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.  சொந்தமாக லாரி வைத்துள்ள ஜெயராமன், வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு வாரத்தில் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மதுபோதைக்கு அடிமையான ஜெயராமனை மனைவி அடிக்கடி கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் வழக்கம்போல் குடித்து விட்டு வந்த கணவனிடம் மனைவி கனி தகராறு செய்துள்ளார்.

பின்னர் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த  மண்ணெண்னையை உடலில்  ஊற்றி தீக்குளித்துள்ளார்.  அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளும் அவரை காப்பாற்ற முயன்றனர்.

இதனால் அவர்கள் மீதும் தீ பரவியது. இதில் மனைவி கனி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணவர் ஜெயராமன் மகள் தர்ஷினி, மகன் கவின் ஆகிய மூவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக  பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

13 Comments

  1. We are a gaggle of volunteers and starting a brand new scheme in our community. Your web site offered us with helpful information to paintings on. You’ve performed a formidable task and our whole neighborhood can be grateful to you.

  2. Hi, I do believe this is an excellent blog. I stumbledupon it 😉 I may come back once again since i havebook marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide others.

  3. Hello! I’ve been following your web site for a long time now and finally got the bravery to go ahead and give you a shout out from Kingwood Texas! Just wanted to tell you keep up the fantastic job!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button