இந்தியாகவர் ஸ்டோரிகேரளா

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடைபெற்றது அம்பலம் – அமலாக்கத்துறை விசாரிக்க முடிவு

கடந்த ஜூன் 5 ஆம் தேதி, துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த பார்சலில், 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு அனுப்பப்பட்ட இந்த பார்சலை, திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட பைசல் பரீத். ராபின்ஸ் ஹமீத் ஆகியோருக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து, கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தங்க கடத்தல் வழக்கில், கேரள முதல்வரின் முதன்மை செயலரும், தகவல் தொழில்நுட்ப துறை செயலருமான சிவசங்கரனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில், ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை சுங்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர்.  இருவரது காவல் நிறைவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கொச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து, ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ள அமலாக்கத்துறை,   இதுதொடர்பாக, என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.  இம்மனுவை விசாரித்த  நீதிமன்றம், ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

 

Related Articles

9 Comments

  1. Thank you for sharing superb informations. Your site is so cool. I am impressed by the details that you¦ve on this blog. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my friend, ROCK! I found just the information I already searched all over the place and just could not come across. What a great website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button