இந்தியாகிரைம்

ஈவ் டீசிங் காரணமாக மாணவி பலி ! நடுரோட்டில் உயிர் பிரிந்த சோகம் !

உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் ஈவ் டீசிங் காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கவும்தம்புத்நகர் மாவட்டம் தாத்ரி பகுதியை சேர்ந்தவர் சுதிக்க்ஷா. இவரின் தந்தை தேநீர் விற்று வருகிறார். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுதிக்க்ஷா இரண்டு வருடங்களுக்கு முன்பு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இது பல செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக இடம்பெற்றது.

இவரின் மதிப்பெண் காரணமாக அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பாப்சன் பல்கலைக் கழகத்தில் காலர்ஷிப்புடன் கல்வி பயில சுதிக்க்ஷா தேர்வானார். தொடர்ந்து அங்கு படித்து வந்த அவர் கொரோனா காரணமாக சொந்தஊர் திரும்பியுள்ளார்.

அருகில் உள்ள தனது உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற சுதிக்க்ஷா சென்ற வாகனத்தை இடைமறித்த இளைஞர்கள் சுதிக்க்ஷா விடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சுதிக்க்ஷா சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து உத்திரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுதிக்க்ஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

Related Articles

4 Comments

  1. Good web site! I really love how it is easy on my eyes and the data are well written. I am wondering how I could be notified when a new post has been made. I’ve subscribed to your RSS feed which must do the trick! Have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button