அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமூகநீதி உரிமையை தட்டிப் பறிக்கிறது -திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் பற்றி வெளிப்படையான ஆய்வு நடத்தி, தவறுகளைக் களைய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியுள்ள 2019ஆம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவரின் சமூகநீதி உரிமை அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவின் கட் ஆப் மதிப்பெண் பட்டியலில், மத்திய பா.ஜ.க.அரசு அவசர அவசரமாக கொண்டு வந்த முன்னேறிய உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு பெரும் பாதகம் விளைவித்துள்ளதைக் காண முடிவதாகப் புகார் கூறியுள்ளார்.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கட் ஆப் மதிப்பெண் 95.34ஆகவும், 10 சதவீத இடஒதுக்கீட்டிற்குரியோருக்கு 90ஆகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை விட, 5.34 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தாலும், இந்தியக் குடிமைப் பணிகளுக்கான ‘முதன்மைத் தேர்வு’ எழுதப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய உயர் வகுப்பினர் தேர்வாகி இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதன்மைத் தேர்வு எழுதியவர்களின் கட் ஆப் அடிப்படையில், மற்ற பிரிவினரை விட, 10 சதவீத இட ஒதுக்கீட்டில் உள்ளோருக்கு குறைந்த அளவே கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.

இறுதியாக ‘நேர்காணல்’ கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 909 மதிப்பெண்கள் பெற்று – ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரியாகத் தேர்வாகி இருப்பதாகவும்,

ஆனால் இதர பிற்படுத்தப்பட்டோர் 925 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்வாக முடியும் என்ற அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் மொத்தம் அறிவிக்கப்பட்ட 927 பணியிடங்களுக்கு, 829 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு – அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 98 பணியிடங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே இதுகுறித்து வெளிப்படையான ஆய்வினை நடத்தி, நேர்ந்திருக்கும் தவறுகளைக் களைந்து, நீதி வழங்கிட வேண்டும் என வலியுறுத்துவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

15 Comments

 1. Woah! I’m really enjoying the template/theme with this website.
  It’s simple, yet effective. Plenty of times it’s quite hard
  to acquire that “perfect balance” between usability and appearance.
  I have to admit you might have done a awesome
  job using this. Also, the blog loads extremely quick for me on Opera.

  Exceptional Blog!

  Feel free to visit my blog; JakeLBartsch

 2. Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.

 3. I’m very happy to uncover this site. I want to to
  thanks for ones time just for this fantastic read!!
  I definitely appreciated every element of it and i also have you ever saved
  being a favorite to see new stuff on your own internet site.

  My website KasieBAhlm

 4. I’m really inspired along with your writing abilities and also with the structure to your weblog. Is this a paid subject or did you modify it yourself? Either way stay up the excellent high quality writing, it is rare to look a great weblog like this one these days..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button