அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

மேலும் 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா உறுதி – இதுவரை 31 எம்.எல்.ஏ-க்கள் நோய் தொற்றால் பாதிப்பு

மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாணிக்கம், திருச்சி மண்ணச்சநெல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக சந்தித்து செய்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் கொரோனா தாக்குதலுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்.  திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து,  நாகை எம்.பி. செல்வராஜூ, சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம்,  மயிலாடுதுறை எம்.பி, ராமலிங்கம், பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ்  ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல்,  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல், மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் நோய் தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில்,  குளித்தலை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. ராமருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்‍கப்பட்டார்.  இதேபோல், மதுரை தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் இதுவரை  4 அமைச்சர்கள் உட்பட 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

10 Comments

  1. Nice post. I learn something new and challenging on sites I stumbleupon everyday. It will always be exciting to read through articles from other writers and practice a little something from their web sites.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button