உலகம்கவர் ஸ்டோரிசெய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் பற்றி உலக நாடுகளுக்கு எச்சரிக்கை – சுயநலத்துடன் செயல்பட வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், மனித குலத்தை அழித்துவிட வேண்டும் என்ற முடிவோடு அசூர வேகத்தில் பரவி வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் எடுத்து வருகின்றன.

இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க மருத்துவ குழுவினர் தீவிர முயற்சி வருகின்றனர். இதனால் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உலக முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 கோடியாக உயர்ந்துள்ளது. 7 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கிருமி நாசினி திரவத்தை கொண்டு சுத்தம் செய்வது  போன்றவற்றை கடைபிடித்தால்,  நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதனோம், ஜெனீவால் இருந்து காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது,  கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தைக் காட்டுவது மிகவும் தவறானது என்றார்.

கொரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அவர் கூறினார்.  உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள தற்போதைய சூழலில்,  தங்கள் நாட்டு மக்கள் மட்டும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற்றுவிடலாம் என்று நினைப்பது மிகவும் தவறு என்றும்  டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

Related Articles

14 Comments

  1. Thanks for one’s marvelous posting! I really enjoyed reading it, you could be a great author.I am going to be sure you bookmark your blog and
    definitely will return later on. I want to encourage one to continue your
    great posts, use a nice evening!

    Also visit my webpage – TelmaDThobbs

  2. Magnificent beat ! I wish to apprentice while you amend your web site, how can i subscribe for a blog web site? The account aided me a acceptable deal. I had been tiny bit acquainted of this your broadcast offered bright clear concept

  3. Very nice post and straight to the point. I don’t know if this is in fact the best place to ask but do you people have any ideea where to get some professional writers? Thanks in advance 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button