இந்தியாகர்நாடகாகவர் ஸ்டோரிகேரளாதமிழ்நாடுவானிலை

தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு – 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும்,  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்வதாலும், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி, கபினி அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி மற்றும் கபினியின் துணை அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி என மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.

இந்த அணைகளில் இருந்து  திறந்து விடப்பட்ட உபரி நீரால் ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் ஐவர் பவனி அருவிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.  இதனால்,  அருவியின் அருகில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று காலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 37.92 டிஎம்சியாகவும் உள்ளது.

இதேபோல், கேரளத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. நேற்று மாலை நீர்மட்டம் 135 அடியை நெருங்கியது. விரைவில் 142 அடிக்கு உயர வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,671 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே, கேரள மாநிலம் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும்,  கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் உள்ளிட்ட 7  மாவட்டங்களில்  மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

7 Comments

  1. After I originally commented I clicked the -Notify me when new comments are added- checkbox and now every time a remark is added I get four emails with the same comment. Is there any manner you’ll be able to take away me from that service? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button