அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி – அதிர்ச்சியில் கட்சி தொண்டர்கள்

மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாணிக்கம், திருச்சி மண்ணச்சநெல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், சினிமா பிரபலங்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் என அனைவரும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு, நாகை எம்.பி. செல்வராஜூ, சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம்,  மயிலாடுதுறை எம்.பி, ராமலிங்கம், பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ்  ஆகியோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாணிக்கத்தை பரிசோதனை செய்த போது கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.  இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை  4 அமைச்சர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

17 Comments

  1. Heya i’m for the primary time here. I came across this board and I find It truly helpful & it helped me out a lot. I hope to offer one thing again and aid others such as you aided me.

  2. Great – I should certainly pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs as well as related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it in the least. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, website theme . a tones way for your client to communicate. Nice task.

  3. Attractive part of content. I simply stumbled upon your site and in accession capital to claim that I get in fact loved account your blog posts. Anyway I’ll be subscribing in your feeds or even I achievement you get entry to persistently fast.

  4. I carry on listening to the rumor talk about getting boundless online grant applications so I have been looking around for the most excellent site to get one. Could you tell me please, where could i acquire some?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button