அரசியல்இந்தியாகவர் ஸ்டோரி

அயோத்தியில் மசூதிக்கான இடத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா – யோகி ஆதித்யநாத் கட்டாயம் அழைக்கப்படுவார்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகே தானிப்பூர் கிராமத்தில் சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. எங்களுக்கு அளிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டுவதற்காக அடுத்த 10 நாட்களில் ஒரு அறக்கட்டளையை லக்னோவில் உருவாக்க இருப்பதாக சன்னி வக்பு வாரியம் அறிவித்தது

இந்நிலையில் சன்னி வக்பு வாரியத்தின் உறுப்பினரும், இந்திய இஸ்லாமிய கலாச்சார அமைப்பின் செயலாளருமான அதார் ஹூசைன் பிடிஐ நிருபருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது  தானிப்பூரில் 5 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை, நூலகம், சமூக உணவுக்கூடம், ஆய்வு மையம் போன்றவை மக்களுக்காக  கட்டப்பட உள்ளதால், இந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட முதல்வர் ஆதித்யநாத் அழைக்கப்படுவார் என கூறினார்.

இந்தக் கட்டிடங்களுக்கு இதுவரை எந்த பெயரும் சூட்ட திட்டமிடப்படவில்லை என்று கூறிய ஹூசைன்,  அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்காமல், திட்டங்களுக்கு  ஆதித்யநாத் உதவி செய்வார் என நம்புவதாக தெரிவித்தார்.

முன்னதாக உத்தரபிரதேச முதல்வராக ராமர் கோயிலின் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டது போல், மசூதி கட்டப்பட்டால் அந்த நிகழ்ச்சிக்கும் செல்வீர்களா?’ என முதல்வர் யோகியிடம் நிரூபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலாளித்த அவர்,  நான் ஒரு இந்து என்ற அடிப்படையில் என்னுடைய மதக்கோட்பாடுகளை பின்பற்றுவதால், மசூதிக்கு நான் செல்ல முடியாது என்றும்,
ஆனால் முதல்வராக என்னை அழைத்தால், எந்த மதம், நம்பிக்கை, சமூகம் எனப் பார்க்கமால் அங்கு செல்வேன் என கூறினார்.

அதேசமயம், மசூதியின் அடிக்கல்நாட்டு விழாவிற்கு என்னை எவரும் அழைக்க மாட்டார்கள் என்றும்,  நான் அதற்கு செல்லவும் மாட்டேன் என முதல்வர் யோகி கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது-

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button