Uncategorizedஇந்தியாகவர் ஸ்டோரி

விஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

பஞ்சாபில் கடந்த 29 ஆம் தேதி விஷச் சாராயம் குடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷச் சாராயம் குடித்ததில் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பலியாகினர்.

பலர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து, 3 மாவட்டங்களில், 500க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில், கலால், வரி துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள், 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த வழக்கில் கண்டறியப்படும் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும், ஒருவர் கூட தப்ப முடியாது எனவும் கூறினார். இதற்காக சிறப்பு வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், விஷச்சாராயம் தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது என கூறினார்.

இந்த சூழ்நிலையில், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ஆக உயர்த்தி அறிவித்து முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டார்.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button