நீலகிரிமாவட்டம்வானிலை

நீலகிரியில் நான்காவது நாளாக தொடரும் கனமழை – வெள்ள ஆபாய எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் 4 வது நாளாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எமரால்டு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 1.19 மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி பகுதியில் 581 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தும் மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக வனப்பகுதியில் உள்ள சிறு நீரோடைகள் வழியாக வரும் தண்ணீரால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாக அறிவுறுத்தியுள்ளது.

nilgiri flood

 

உதகை எமரால்டு பகுதியில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு மற்றும் பூமி பிளவு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பிளந்து சுமார் 1000 மீட்டர் தூரத்திற்கு மண் மற்றும் சகதி அடித்துச் செல்லப்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காற்று, மழையின் தாக்கம் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வருவதை தவிரக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Articles

8 Comments

  1. Simply wish to say your article is as astounding. The clearness in your post is just nice and i can assume you’re an expert in this subject. Fine together with your permission allow me to seize your feed to keep up to date with approaching post. Thank you a million and please continue the gratifying work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button