அரசியல்இந்தியாகவர் ஸ்டோரி

கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – பிரதமர் மோடி விமர்சனம்

டெல்லியில், மத்திய கல்வி அமைச்சகமும். பல்கலைக் கழக மானிய குழுவும் இணைந்து புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாற்றத்துக்கான மிக முக்கியமான கருவியாக புதிய கல்வி கொள்கை இருந்து வருகிறது என்றார்.

கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் மட்டுமே ஒரே வழி என்றும், எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராக உள்ளதாகவும் கூறினார். கல்வி மற்றும் திறன் மூலம் இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர்,  மாணவர்கள் சிந்திப்பதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் எந்த வித பாகுபாடும் இல்லாததால், கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுவதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையானது மாற்றத்துக்கான மிக முக்கியமான கருவி என்றும், இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கும் வளர்ச்சியை அதிகரிக்கவும் புதிய கல்விக்கொள்கை அவசியம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நமது கல்வி முறை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மிகப்பெரிய சவால் என்றும், இதன் மூலம் கல்வி முறை வலுப்பெறும் எனவும் குறிப்பிட்டார். 21-ம் ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் என்றும் நம்பிக்கையும் கூறினார்.

Related Articles

8 Comments

  1. Aw, this was a really nice post. In thought I want to put in writing like this additionally – taking time and precise effort to make an excellent article… however what can I say… I procrastinate alot and on no account seem to get one thing done.

  2. You actually make it seem so easy along with your presentation however I in finding this matter to be really one thing that I feel I would by no means understand. It kind of feels too complicated and very extensive for me. I’m taking a look ahead for your subsequent publish, I will attempt to get the dangle of it!

  3. Hi! This is my first visit to your blog! We are a group of volunteers and starting a new initiative in a community in the same niche. Your blog provided us valuable information to work on. You have done a extraordinary job!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button