கவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடு

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு

சென்னையில்  740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் அம்மன் கெமிக்கல் சென்டர் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு, சென்னையை அடுத்த மணலியில் சுங்கத்துறைக்கு சொந்தமான சாஃடா எனப்படும் சி.எப்.எஸ் கிடங்களில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்தது. அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்த இந்த அமொனியம் நைட்ரேட்டை ஏலம் விட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்சூழ்நிலையில், லெபனானில் நடைபெற்ற வெடிவிபத்து தொடர்பாக இந்தியா முழுவதும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் துறைமுகங்களில் உள்ள வெடிக்கும் சம்பந்தப்பட்ட பொருட்கள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அமோனியம் நைட்ரேட்டானது பாதுகாப்பான முறையில் உள்ளதாகவும், இருப்பு வைக்கப்பட்டுள்ள கிடங்கில் இருந்து 700 கி.மீ தொலைவில் மணலி புதுநகர் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், மணலி கிடங்கில் உள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. லெபானின் பெய்ரூட்டில் கடந்த செவ்வாய் அன்று நிகழ்ந்த வெடி விபத்தால் 137 பேர் உயிரிழந்தனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

9 Comments

  1. I like the valuable info you provide on your articles. I will bookmark your weblog and check once more right here frequently. I’m reasonably certain I will be told plenty of new stuff proper right here! Good luck for the next!

  2. I would like to thnkx for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. In fact your creative writing abilities has inspired me to get my own blog now. Really the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.

  3. I am really enjoying the theme/design of your weblog. Do you ever run into any web browser compatibility problems? A handful of my blog audience have complained about my blog not working correctly in Explorer but looks great in Safari. Do you have any tips to help fix this problem?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button