இந்தியா

பதஞ்சலியின் கொரோனா மருந்துக்கு தினமும் 10 லட்சம் ஆர்டர் வருகிறது- யோகா குரு ராம்தேவ்

பதஞ்சலியின் கொரோனா நோய் எதிர்ப்பு மாத்திரையான கொரோனிலுக்கு நாள்தோறும் 10 லட்சம் ஆர்டர்கள் வருகின்றன என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கடந்த மாதம் அறிவித்தார் யோகா குரு பாபா ராம்தேவ். இந்த ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கொரோனா நோய் குணமடையும் என்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது.

மேலும் இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் பலருக்கு கொடுத்து பார்த்ததில் அனைவரும் கொரோனா நோயில் இருந்து குணமடைந்தனர் என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அமைச்சகமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் அந்த மருந்து விற்பனையை நிறுத்த அரசு சார்பில் எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை. எனவே தொடர்ந்து அந்த மருந்தை பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் அது குறித்து பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலியின் கொரோனா நோய் எதிர்ப்பு மாத்திரையான கொரோனிலுக்கு நாள்தோறும் 10 லட்சம் ஆர்டர்கள் வருகின்றன என பெருமையாக கூறினார்.

அவரின் இந்த பேச்சும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button