இந்தியா

ராமர் கோவில் கட்டப்பட காங்கிரஸ் தான் காரணம் – கேரள முதல்வர் பிணராயி விஜயன் காட்டம்

ராமர் கோவில் கட்ட காங்கிரசும் ஒரு காரணம் , அது எப்போதும் மென்மையான ஹிந்துத்துவாவை கடைபிடிக்கிறது என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து செய்தி கூறியிருந்தார். அதே போல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் வாழ்த்து செய்தியை கூறியிருந்தார்.

இதுகுறித்து கேரளா முதல்வர் பினராய் விஜயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொது ”ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அறிக்கை வெளியிட்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மென்மையான இந்துத்துவா போக்கை தான் காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது . ராஜீவ் காந்தியில் இருந்து நரசிம்ம ராவ் வரையிலும் அனைவருமே இதை தான் செய்திருக்கிறார்கள். மதச்சார்ப்பற்ற விஷயத்தில் காங்கிரஸ் உறுதியான கொள்கையை கடைபிடித்து இருந்தால், தற்போது இந்தியாவுக்கு இந்த சூழலே ஏற்பட்டு இருக்காது.

பாபர் மசூதியில் சாமி கும்பிட்ட செயலை காங்கிரஸ் அனுமதித்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் கர் சேவா சம்பவம் நடந்தது. பாபர் மசூதியை இடித்தபோது காங்கிரஸ் வாய் மூடி மவுனமாக தான் இருந்தது. அப்போது நரசிம்ம ராவ் ஆட்சியில் தான் இது எல்லாம் நடந்தது.

இதில் மற்றொன்றும் குறிப்பிட வேண்டிய ஒன்றும் உள்ளது. காங்கிரசுடன் அப்போது இந்தியன் முஸ்லிம் லீக்கும் அமைதியாகத்தான் இருந்தது. இவையெல்லாம் இந்திய வரலாற்றின் ஒரு அங்கமாக பதித்துள்ளது.

நாடு தற்போது மோசமான கொரோனா நோயை எதிர்கொண்டு வருகிறது. 19 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாம் ஆலோசிக்க வேண்டும். மக்கள் கையில் பணம் இல்லாமல் மிகவும் திண்டாடி வருகின்றனர். இதை எப்படி களைவது என்று சிந்திக்க வேண்டும். இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என கேரள முதல்வர் கூறினார்.

Related Articles

9 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button