அரசியல்தமிழ்நாடு

எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது?- காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கேள்வி

எஸ் .வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது என முதல்வர் பழனிச்சாமியை நோக்கி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கல்வி கொள்கையில் தமிழக அரசின் முடிவை பற்றி கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான எஸ்வி சேகர் “அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள். அட்லீஸ்ட் திரும்ப நீங்க வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லன்னா கிடைக்கவே கிடைக்காது’ என்று கூறினார்.

இன்று எஸ்வி சேகரின் அந்த கருத்தை பற்றி பேசிய முதல்வர் பழனிச்சாமி ” எஸ்.வி சேகரின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை, ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார்” என கூறினார்.

இந்த விவகாரம் பற்றி இன்று தனது ட்விட்டர் பதிவில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் “முதல்வர் அவர்களே அப்படிப்பட்ட எஸ் .வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் எஸ்.வி சேகரை தனிப்படை அமைத்தும் காவல்துறையால் பிடிக்கமுடியவில்லை. அந்த சம்பவத்தை குறிப்பிட்டே ஜோதிமணி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Articles

9 Comments

  1. I have recently started a site, the information you offer on this web site has helped me greatly. Thanks for all of your time & work. “Cultivation to the mind is as necessary as food to the body.” by Marcus Tullius Cicero.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button