இந்தியாதமிழ்நாடு

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஜெய்ஸ்ரீராம் ஹாஸ்டாகுகள், தமிழகத்தில் அதை மிஞ்சிய ராவணபூமி ஹாஸ்டாகுகள்!

இன்று உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடக்கவிருக்கிறது. அதை தொடர்ந்து ட்விட்டரில் இந்திய அளவில் ஜெய்ஸ்ரீராம் ஹாஸ்டக் ட்ரெண்ட் ஆகினாலும், தமிழக அளவில் இராவணன்பூமி போன்ற ஹாஸ்டாகுகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ராமர்-ராவண யுத்தம் ராமாயண கதையின் முக்கிய அம்சமாகும். அதில் ராமர் இலங்கைக்கு சென்று ராவணனை அழித்து சீதையை மீட்டு வருவதாக இருக்கும். மேலும் ராமர் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக நம்பப்படுவதால் ராமர் கடவுளாக கொண்டாடப் படுகிறார்.

ஆனால் தமிழ்நாட்டில் இராவணன் தமிழ் மன்னனாகவும் நம்பப்படுகிறார். மேலும் ராமாயணகதையில் ராமரை நல்லவராக காட்ட ராவணனை கெட்டவன் ஆக்கி விட்டனர் என்றும் சொல்பவர்களும் உண்டு. மேலும் ராவணணை போற்றி எழுதிய ராவண காவியம் நூல் தமிழ்நாட்டில் எழுதப்பட்டது. முதலில் அரசால் தடை செய்யப்பட்ட அந்நூல் பின் மீண்டும் வெளிவந்தது.

இந்நிலையில் ராமர் கோவில் அயோத்தியில் எழுப்பப்பட இருக்கிறது. அதை முன்னிட்டு இந்திய அளவில் #JaiShreeRam ஹாஸ்டாகுகள் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் அதற்கு மாறாக தமிழ்நாட்டில் இருந்து #LandOfRavanan, #TamilsPrideRavanaa போன்ற ஹாஸ்டாகுகள் ட்ரெண்ட் செய்யப் பட்டு வருகின்றன.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button