அரசியல்தமிழ்நாடு

எஸ்.வி சேகருக்கு மானம்,ரோசம் இருந்தால் சம்பளத்தை அரசாங்கத்துக்கு கொடுக்கணும்- அமைச்சர் ஜெயக்குமார்

எஸ்.வி சேகருக்கு மானம்,ரோசம் இருந்தால் ஐந்து வருட சம்பளத்தை அரசாங்கத்துக்கு திருப்பிக் கொடுக்கணும். தற்போது எம்.எல்.ஏ. க்களுக்கான பென்சன் வாங்குகிறார். அதையும் இவர் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறியுள்ளார்.

மத்திய அரசு புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கையை கட்டாயமாக்கி உள்ளது. ஆனால் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது, தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் இது பற்றி கருது தெரிவித்த பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான எஸ்வி சேகர் கூறியபோது, ‘
அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள். அட்லீஸ்ட் திரும்ப நீங்க வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லன்னா கிடைக்கவே கிடைக்காது’ என்று கூறினார்.

நடிகர் எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ’இவர் உண்மையில் மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அம்மா இவரை அடையாளம் காட்டினர். மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அம்மாவால், அதிமுக கொடியை, அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். மான ரோஷம் இருப்பவராக இருந்தால், ஐந்து வருட சம்பளத்தை அரசாங்கத்துக்கு திருப்பிக் கொடுக்கணும். தற்போது எம்.எல்.ஏ. க்களுக்கான பென்சன் வாங்குகிறார். அதையும் இவர் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இவை இரண்டுக்கும் அவர் முதலில் பதில் சொல்லட்டும். ஆதாரம் இல்லாமல் தமிழநாட்டு மக்களிடம் அவர் பேசும் பேச்சுக்கள் மக்களிடம் எடுபடாது” என எஸ்.வி.சேகரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button