கிரைம்தமிழ்நாடுதிண்டுக்கல்

குடிபோதையில் தகராறு செய்து வந்த மகனை தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை..!

திண்டுக்கல் அருகே குடிபோதையில் தகராறு செய்து வந்த சொந்த மகனை தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை கைது.

திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள என்.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் கல்லூரி ஒன்றில் வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ்வரன். மெக்கானிக் செட் நடத்தி வந்த விக்னேஸ்வரன், திடீரென்று குடிபோதைக்கு அடிமையானார். அவரது தந்தை பலமுறை அறிவுரை சொல்லியும் கேட்கவில்லை.

அதுமட்டுமின்றி இந்த குடிபோதை காரணத்தினால் தனது சொந்த மெக்கானிக் ஷெட்டினை கூட விற்றுவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குடிபோதையில் தனது பெற்றோருடன் தினந்தோறும் சண்டை போட்டு வந்துள்ளார் விக்னேஷ்வரன். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த விக்னேஷ்வரன், தனது பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வீட்டிற்குள் குடிபோதையில் மயங்கி கிடந்துள்ளார்.

தனது மகனை இப்படி போதையில் மயங்கிய நிலைமையில் பார்த்த தந்தை, எரிச்சல் கொண்டுள்ளார். மேலும் நாள்தோறும் தனது மகன் அனைவருடனும் தகராறில் ஈடுபட்டு வந்ததால், ஆத்திரமடைந்த விக்னேஷின் சொந்த தந்தையான ஐயப்பன், தனது வீட்டின் அறையில் மயங்கி கிடந்த விக்னேஷின் தலையின் மீது ஒரு பாராங்கல்லை போட்டுள்ளார். இதனால் விக்னேஷின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிகாலை விக்னேஷ்வரன் இறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த புறநகர் டி.எஸ்.பி வினோத் தலைமையிலான போலீசார், விக்னேஷ்வரனின் தந்தையான ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்த மகனை தந்தையே தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் பாறைப்பட்டி கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button