அரசியல்கவர் ஸ்டோரிசெய்திகள்டெல்லிதமிழ்நாடு

பா.ஜ.க. ஆட்சியை தொடர்ந்து குறை சொல்லும் காங்கிரஸின் உறவை மு.க.ஸ்டாலின் முற்றிலும் துண்டிக்க வேண்டும் – திமுக எம்.எல்.ஏ. ஆவேசம்

சென்னை ஆயிரம் விளக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்  கு.க.செல்வம், பா.ஜ.க.வில் இணைந்ததாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லியில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்து கு.செல்வம் திடீரென ஆலோசனை நடத்தினார்.  அப்போது தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் முரளிதர ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த செய்தி வெளியானதை அடுத்து, கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலாயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், துரைமுருகன், ஆர்எஸ் பாரதி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்  கு.க.செல்வம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் பா.ஜ.க.-வில் இணையவில்லை என்றார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிப்ட் அமைக்கக் கோரி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க டெல்லிக்கு வந்ததாக கூறினார். அப்போது தான் பா.ஜக, தலைவர் ஜேபி நட்டாவை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் கு.க.செல்வம் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் திறமையாக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடியை, தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டு வரும் ராகுல்காந்தி மற்றும் அவர் சார்ந்த கட்சி உறவுகளை மு.க.ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் என அவர் கூறியிருப்பது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ராம ஜென்மபூமி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் கு.க.செல்வம் தெரிவித்திருப்பது, பா.ஜ.கவில் அவர் சேர்ந்து விடுவோரோ என்ற ஐயம் கட்சியினரிடையே எழுந்துள்ளது.

ஏற்கனவே திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

9 Comments

  1. Hi! I know this is kind of off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting tired of WordPress because I’ve had issues with hackers and I’m looking at alternatives for another platform. I would be great if you could point me in the direction of a good platform.

  2. I wanted to create you that very small observation just to say thanks again on your stunning things you’ve provided above. It is surprisingly generous of people like you to grant unreservedly what numerous people would have distributed as an e book to help with making some cash on their own, specifically seeing that you could have tried it if you decided. These guidelines also served to provide a great way to be aware that other people have similar interest much like my personal own to grasp a lot more regarding this problem. I’m sure there are lots of more enjoyable situations in the future for people who read through your blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button