இந்தியாஉத்தரபிரதேசம்கவர் ஸ்டோரி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

உத்தரபிரேத மாநிலம் அயோத்தியில் ராமபிரான் பிறந்ததாகவும், அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளை ராம நவமியாகவும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ,உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பூமி பூஜைக்கான சடங்குகள், அயோத்தியில் கடந்த இரண்டு நாட்களுக்காக நடைபெற்றன.

இந்தநிலையில், டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் காலை 11.30 மணிக்கு அயோத்திக்கு வந்த பிரதமர் மோடி, முதலில் ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் குழந்தை ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர், அங்குள்ள உண்டியலில் கணிக்கையும் செலுத்தினார்.

இதனை தொடர்ந்து ராமஜென்ம பூமிக்கு சென்ற பிரதமர் மோடி, நண்பகல் 12.40 மணிக்கு 40 கிலோ எடைக்கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட, 175 பேர் பங்கேற்றனர். மேலும், அயோத்தி நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி, அயோத்தியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Articles

9 Comments

  1. Please let me know if you’re looking for a article author for your weblog. You have some really great posts and I think I would be a good asset. If you ever want to take some of the load off, I’d love to write some articles for your blog in exchange for a link back to mine. Please send me an e-mail if interested. Thank you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button