இந்தியாசெய்திகள்

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா | பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

ராமர் கோவிலுக்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் அயோத்தி கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை,இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவையொட்டி அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அயோத்தி முழுவதும் மிகத்தீவிர தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக ஏராளமான சுகாதார அதிகாரிகள் அங்கு முகாமிட்டு உள்ளனர். இதைப்போல பிரதமர் மோடி மற்றும் ஏராளமான முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் அயோத்தியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தி மாவட்டம் முழுவதுமே ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் அயோத்தி கொண்டு வரப்பட்டு உள்ளது.

Related Articles

3 Comments

  1. I love your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to construct my own blog and would like to know where u got this from. thanks a lot

  2. Hi, Neat post. There is an issue together with your website in internet explorer, would check this… IE still is the market leader and a big part of other people will leave out your excellent writing because of this problem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button