செய்திகள்

கேள்விக்குறியாகியுள்ள பழங்குடி மாணவர்களின் கல்வி..!

குன்னூரை சுற்றியுள்ள பழங்குடியின கிராம பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரத்தில் புதுக்காடு, குரும்பாடி, பர்லியார் போன்ற பகுதிகளில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதியில் விளையக்கூடிய கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் மட்டுமல்லாமல் மூங்கிலில் செய்யக்கூடிய கைவினை பொருட்கள் விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனா பாதிப்பால் நகர்புற மாணவர்கள் ஆன்லைன் மற்றும் தொலைகாட்சி வழியாக கல்வி கற்று வருகின்றனர். ஆனால் பழங்குடி மாணவர்களுக்கு இது எட்டா கனியாக உள்ளது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button