கவர் ஸ்டோரிசெய்திகள்தமிழ்நாடுமாவட்டம்

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குளச்சல் முதல் தனுஷ் கோடி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவ மழைக் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் அதிக கனமழையும், கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  கடந்த 24 மணி நேரத்தில் மேல் பவானியில் அதிகபட்சமாக 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

குளச்சல் முதல் தனுஷ் கோடி வரை நாளை இரவு கடல் அலை சீற்றதுடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related Articles

9 Comments

  1. I loved as much as you will obtain performed proper here. The cartoon is tasteful, your authored subject matter stylish. nevertheless, you command get bought an nervousness over that you would like be turning in the following. ill surely come further until now once more since precisely the same just about a lot continuously within case you protect this increase.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button