தமிழ்நாடுராமநாதபுரம்

வாழ்வாதாரத்திற்காக சீனாவுக்கு திரும்பி செல்ல காத்திருக்கும் பரோட்டா மாஸ்டர்கள்..!

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் உள்ள அனைத்து தொழில்களும், அதனைச் சார்ந்துள்ள தொழிலாளர்களும் முடங்கிய நிலையில் இருக்கிறார்கள். எனவே அந்தந்த நாட்டை சேர்ந்தவர்கள் அவரவர் நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுகிறார்கள்.

இந்நிலையில் ஏற்கனவே சீனாவில் உள்ள உணவகங்களில் வேலை செய்து வந்த இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகாவை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ‘பரோட்டா மாஸ்டர்கள்’ தாங்கள் மீண்டும் சீனா திரும்பி செல்லும் நாளை எதிர் பார்த்துக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வானம் பார்த்த பூமியான இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்கள் ஏராளம். இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் போதிய மழையின்றி விவசாயமும் செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில், தங்கள் வருவாய்க்காக மாற்று தொழிலை தேடி ஆயிரக்கணக்கானோர் வெளிநாட்டிற்கு செல்ல துவங்கிவிட்டனர்.

இவ்வாறாக திருவாடானை தாலுகாவை சுற்றியுள்ள ஆலம்படி, புலியூர், நத்தைகொட்டை, ஓரியூர், அக்கலை, பனஞ்சாயல், வெள்ளையாபுரம் என 8க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் சீனாவிற்கு சென்றனர்.

ஏனென்றால், தமிழக பரோட்டாவுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனையறிந்த இராமநாதபுரம் மக்கள் சீன உணவகங்களில் பரோட்டா மாஸ்டர் வேலைக்காக சென்றனர்.

ஆனால் சீனாவில் பரவிய கொரோனா தொற்று காரணமாக சுமார் 300க்கம் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இந்நிலையில், கொரோனாவிற்கு அடுத்ததாக இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையேயான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை பிரச்சினை காரணமாக, இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களாக வேலையின்றி சொந்த ஊர்களில் தவித்து வரும் இவர்கள், மீண்டும் சீனா திரும்பி செல்லும் நாளை எதிர் நோக்கி குடும்பத்துடன் காத்திருக்கின்றனர்.

இதனைப்பற்றி அவர்கள் கூறும்போது,

இந்திய பரோட்டாவிற்கு சீனாவில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் சீனாவில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தோம். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கொரோனா காரணமாக என் சொந்த ஊருக்கு திரும்பினோம். இரு நாட்டு பிரச்சினை தமிழக தொழிலாளர்களை பாதிக்கக் கூடாது. நாளைக்கே விமான போக்குவரத்து தொடங்கினால் உடனடியாக நாங்கள் சீனா செல்ல தயாராக உள்ளோம். சீனா செல்வதற்கு ஒரு நல்ல செய்தி தொலைக்காட்சியில் வருமா.. என நாங்கள் தினமும் டிவி செய்தி சேனல்களை பார்த்து வருகிறோம்” என்று கூறினார்கள்.

Related Articles

11 Comments

  1. I’m really enjoying the design and layout of your blog. It’s a very easy on the eyes which makesit much more pleasant for me to come here and visit more often. Did youhire out a designer to create your theme? Excellent work!

  2. naturally like your web site but you have to check the spelling on several of your posts. Several of them are rife with spelling issues and I find it very troublesome to tell the truth nevertheless I’ll surely come back again.

  3. I’ve been browsing on-line more than 3 hours these days, but I never found any fascinating article like yours. It?¦s pretty worth sufficient for me. In my opinion, if all web owners and bloggers made excellent content material as you probably did, the net will likely be a lot more helpful than ever before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button