கிரைம்சென்னைதமிழ்நாடு

சென்னை டி.எஸ்.பி. வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கல் – மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி சோதனை

சென்னையில் சி.பி.சி.ஐ.டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கீழ்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் போதைபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில், ஏராளமான போதைப் பொருட்கள், பாக்கெட் தயாரிக்கும் மெஷின், கஞ்சா எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக தேனியை சேர்ந்த அருண் என்பவரை கைது செய்து விசாரித்ததில்,  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர் குடியிருப்பது சி.பி.சி.ஐ.டி. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனின் வீடு என்றும், ஒரு வருடமாக வாடகைக்கு விட்டிருப்பதும் தெரிய வந்தது.

டி.எஸ்.பி. வீடு என்பதால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், அருண் போதைப்பொருள் விற்பனை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் டிஎஸ்.பி-க்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் மீது துறை ரீதியான விசாரணையும் நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

Related Articles

10 Comments

  1. When I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get several emails with the same comment. Is there any way you can remove people from that service? Many thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button