இந்தியா

ராமர் கோவில் நாளை பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், அயோத்தி நகரம் கொண்டாட்டங்களால் களைகட்டியுள்ளது.

ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர்.

பூமி பூஜைக்கான சடங்குகள் கவுரி விநாயகர் பூஜையுடன் நேற்று காலை தொடங்கியது. வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 சாமியார்கள், ராமஜென்மபூமி வளாகத்தில் இந்த சடங்குகளை தொடங்கினர். முன்னதாக குழந்தை ராமர் சிலைக்கு அணிவிக்கும் 4 ‘செட்’ ஆடைகளை பண்டிட் காலிக்ராம், கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாசிடம் ஒப்படைத்தார். விழாவுக்கான கொடியையும் அவர் வழங்கினார்.

இடைவிடாது ஒலித்து வரும் பஜனைகளால் அயோத்தி முழுவதும் ஆன்மிக மணம் கமழுகிறது. காணும் இடமெல்லாம் ராமாயண காட்சிகளாலும், ராம பிரானின் படங்களாலும், வண்ண கோலங்களாலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒளிவெள்ளத்தில் மிதக்கும் அயோத்தியில் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.

Related Articles

9 Comments

  1. Hey, you used to write wonderful, but the last several posts have been kinda boringK I miss your tremendous writings. Past few posts are just a bit out of track! come on!

  2. Hi would you mind letting me know which web host you’re using? I’ve loaded your blog in 3 different web browsers and I must say this blog loads a lot faster then most. Can you recommend a good hosting provider at a reasonable price? Kudos, I appreciate it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button