இந்தியாசெய்திகள்

ம.பி. முதல்வருக்கு 2வது சோதனையிலும் கொரோனா உறுதி

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சையைத் தொடர்ந்து வருகிறார். சிவராஜ் சிங் சவுகானுக்கு கடந்த 25 ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் 10 நாட்கள் இடைவெளியிக்குப் பிறகு அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த 2வது பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close