கவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடுமாவட்டம்

10 தனியார் டி.வி. சேனல்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்-லைன் கல்வி ஒளிபரப்பு

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் கல்வி தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக இன்று முதல் ஒளிபரப்பாகிறது.
கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. சி.பி.எஸ்.சி. பாடங்களை நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டும் ஏற்கனவே ஆன்-லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை கேள்விகுறியாக இருந்தது. இதனையடுத்து மாணவர்களின் நலன் கருதி, தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இந்தநிலையில், சத்தியம், மதிமுகம், லோட்டஸ் உள்ளிட்ட 10 தனியார் தொலைக்காட்சிகளின் வாயிலாக 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆன்-லைன் வகுப்புகள் இன்று முதல் நடத்தப்படுகின்றன. இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்பு நடத்தக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related Articles

10 Comments

  1. You could certainly see your skills in the work you write. The world hopes for even more passionate writers like you who aren’t afraid to say how they believe. Always follow your heart.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button