அரசியல்தமிழ்நாடு

சமூக இடைவெளி இல்லாமல் மது வழங்க முடிகிறது, மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாதா?- தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

சமூக இடைவெளி இல்லாமல் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது, ஆனால் சமூக இடைவெளி இல்லாமல் மதுக்கடையில் மது வழங்க எப்படி முடிகிறது? அதை மூட கொள்கை முடிவு எடுக்க முடியாதா? என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பள்ளி மாணவர்களுக்கு முட்டை போன்ற சத்தான உணவுகளை இலவசமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

அதற்கு தமிழக அரசு சார்பில் சமூக இடைவெளி இல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்று பதிலளித்தது.

உடனே நீதிபதி குறுக்கிட்டு டாஸ்மாக்கிலும் சமூக இடைவெளி இல்லாமல் மதுக்கடைகள் வழங்கப் படுகிறது. அதை மூட ஏதும் கொள்கை முடிவு எடுக்கமுடியுமா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Related Articles

7 Comments

  1. My spouse and I absolutely love your blog and find nearly all of your post’s to be precisely what I’m looking for. Do you offer guest writers to write content in your case? I wouldn’t mind creating a post or elaborating on some of the subjects you write related to here. Again, awesome web log!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button