தமிழ்நாடுமதுரை

மதுரையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு- அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

மதுரையில் சைக்கிளில் வந்து விரட்டி விரட்டி மூதாட்டியிடம் தங்க செயினை பறித்து சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கில் பலர் வீட்டிலேயே இருப்பதால் பொது இடங்களில் நடக்கும் குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் வருகிறது. இப்போது அதே போல சம்பவம் தான் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை தெற்குவாசல் தெருவில் கடைக்கு சென்று பின் வீட்டுக்கு திரும்பிய 55 வயது மூதாட்டியிடம் சைக்கிளில் வந்த மர்ப நபர் ஒருவர் மூதாட்டி அணிந்த மூன்று பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்த மூதாட்டி அவரிடம் இருந்து தன் நகையை காப்பாற்ற போராடியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து மூதாட்டியை விரட்டி சென்று நகையை பறித்து சென்றுள்ளார் அந்த மர்ப நபர். உடனே மதுரை தெற்கு தெரு காவல் நிலையத்துக்கு சென்று அந்த மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் இந்த சி.சி.டி.வி காட்சியை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

வீடியோ: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/1-gUxrCPzG0″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Related Articles

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button