அரசியல்இந்தியாகவர் ஸ்டோரி

பஞ்சாப் காவல்துறை பற்றி தவறாக பேசுவதை கெஜ்ரிவால் நிறுத்திக் கொள்ள வேண்டும் – முதல்வர் அர்மீந்தர் சிங் எச்சரிக்கை

பஞ்சாப் காவல்துறை குறித்து உண்மைக்கு புறம்பாக பேசுவதை கெஜ்ரிவால் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அர்மீந்தர் சிங் எச்சரித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், சில மாவட்டங்களில் கள்ளச் சாராயம் விற்பனை சூடு பிடித்துள்ளது. மதுபானங்களின் விலை அதிகமாக உள்ளதால், கள்ளச் சாராயத்தை தொழிலாளர்கள் நாடியதாக கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை கள்ளச் சாராயம் குடித்த டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த 47 பேர் உயிரிழந்தனர்.விஷம் கலந்த மதுவை அருந்தியதால் மரணங்களுக்கு வழிவகுத்தாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ள நிலையில், பலரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் பலியான விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருத்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், முதலில் டெல்லியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் அக்கறை செலுத்தினால் நல்லது என குறிப்பிட்டிருந்தார். மேலும், டெல்லியில் தாதாக்களும், குற்றவாளிகளும் சுதந்திரமாக வலம் வருவதாகவும், விஷ சாராய பிரச்சனையை வைத்து கெஜ்ரிவால் அரசியல் செய்வதாகவும் அவர் சாடினார்.

எனவே, பஞ்சாப் காவல்துறை குறித்து உண்மைக்கு புறம்பாக பேசுவதை கெஜ்ரிவால் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவருடைய வேலையை மட்டும் பார்த்தால் நல்லது எனவும் பஞ்சாப் முதலமைச்சர் அர்மீந்தர் சிங் எச்சரித்துள்ளார்.

 

Related Articles

8 Comments

  1. I have to show some appreciation to the writer just for rescuing me from this particular instance. Because of looking throughout the the net and seeing concepts which are not pleasant, I was thinking my entire life was well over. Being alive minus the approaches to the problems you’ve fixed all through your main article is a critical case, and the kind which may have in a wrong way damaged my entire career if I hadn’t noticed the blog. Your personal mastery and kindness in playing with all the stuff was helpful. I am not sure what I would have done if I hadn’t discovered such a thing like this. I’m able to at this point look forward to my future. Thank you so much for your skilled and amazing help. I won’t be reluctant to refer the blog to any person who needs care about this subject.

  2. you are really a excellent webmaster. The web site loading velocity is amazing. It sort of feels that you’re doing any distinctive trick. Also, The contents are masterpiece. you have performed a wonderful task on this topic!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button