அரசியல்தமிழ்நாடு

தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பது தமிழ் விரோதம்- எச்.ராஜா

தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பது தமிழ் விரோதம், திராவிட விரோதம் என பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. அதில் மாணவர்களுக்கு மூன்று மொழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழக அரசும் மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம். இருமொழி கொள்கையே தொடரும் என்று அறிவித்துள்ளது.

அதை குறிப்பிட்டு பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்ட கருத்தில் “தமிழகத்தில் இன்று வரை தமிழே படிக்காமல் நம் குழந்தைகள் வளர்வதற்கு தேசிய கல்விக் கொள்கை முற்றுப்புள்ளி வைக்கிறது. இதை எதிர்ப்பது தமிழ் விரோதம். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதைப் படிப்பதை எதிர்ப்பது திராவிட விரோதம்” என கூறியுள்ளார்.

Related Articles

8 Comments

  1. Hey! I just wanted to ask if you ever have any trouble with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing many months of hard work due to no data backup. Do you have any methods to protect against hackers?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button