கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பது சரிதானா? – சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்  உரிமம் இல்லாமல் துப்பாக்கி பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற வகையில் சென்னை உயர்நீதிமன்றதில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் தமிழகத்தில் இதுவரை சட்ட விரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உரிமம் இல்லாமல் துப்பாக்கியை பயன்படுத்தியதாக எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனவும் கேட்டனர்.

குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பது சரியல்ல என்றும், தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நக்ஸல்கள், சமூக விரோதிகளும், ஆயுதங்களை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா? என்று கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.

Related Articles

9 Comments

  1. Hiya very cool website!! Guy .. Excellent .. Superb .. I will bookmark your website and take the feeds also…I am happy to seek out so many useful info here within the publish, we want work out more strategies in this regard, thank you for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button