சினிமாபொழுதுபோக்குவைரல்

சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் புகைப்படத்தை வெளியிட்டு வனிதா கேள்வி!

தற்பொழுது சர்ச்சைக்குரிய நடிகையாக இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார்.

பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்த பின்னர், இவர் பெரிய அளவில் பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து லட்சுமிராமகிருஷ்ணன், சூர்யா தேவி, கஸ்தூரி, நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் இவரை சரமாரியாக விமர்சித்தனர்.

மேலும் நாஞ்சில் விஜயன், “தமிழக பிஜேபியில் 10 பேர் தான் இருப்பார்கள்” என்று பிஜேபியை பற்றி வனிதா என்றோ பேசிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து ஒருமுறை லட்சுமிராமகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது அவரை பற்றியும் அவரது கணவரை பற்றியும் அவதூறாக பேசினார் என்று லட்சுமிராமகிருஷ்ணனும்; அதன் பின்னர் சூர்யா தேவியை ‘கஞ்சா வியாபாரி’ என்று அவதூறாக கூறினார் என்று சூர்யா தேவியும்; வனிதாவின் திருமண விழாவிற்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் ஆட்களை வர செய்தார் என்று வனிதா வீட்டு அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுச் செயலாளர் நிஷா தோட்டா போன்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து வனிதாவின் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வனிதா தனது ஆண் நண்பருடன் சரக்கு அடிக்கும் புகைப்படத்தை நாஞ்சில் விஜயன் வெளியிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக வனிதா தற்போது நாஞ்சில் விஜயனுடன் சூர்யா தேவி சரக்கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 👇👇

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close