அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பா.ஜ.க. வேத கலாச்சாரம் திணிப்பு – திமு.க தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கை 2020 தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருத்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை வேளச்சேரியில் உள்ள வீட்டிலிருந்த படி, காணொலி காட்சி மூலம் கல்வியாளர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், உள்ளிட்ட கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், மாணவர்களின் நலனுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கை உள்ளதாகவும், பள்ளிகளில் மும்மொழி கல்வி போன்றவற்றை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், கல்வியில் சிறந்த தமிழ்நாட்டிற்குள், மத யானை புகுந்து நாசம் செய்கிறது என்றும், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வேத கலாச்சாரத்தை திணிப்பதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close