கல்விதமிழ்நாடு

பள்ளி ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது அதில் நுழைந்து ஆபாச கருத்துக்களை பதிவேற்றிய நபர்- சைபர் போலீசார் விசாரணை

பள்ளி ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது அதில் நுழைந்த ஒரு நபர் ஆபாச கருத்துக்கள் பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை அண்ணாநகர் தனியார் பள்ளியொன்றில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, மர்ம நபர் உள்ளே நுழைந்து ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை பற்றி பள்ளி நிர்வாகம் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. ஆன்லைன் வகுப்புக்கு தனி தனி பாஸ்வேர்ட் இருக்கும் நிலையில் அந்த நபர் உள்ளே நுழைந்தது எப்படி? யார் அவருக்கு அந்த பாஸ்வேர்ட் கொடுத்திருப்பார்கள்? என போலீசார் விசாரணை செய்து, பின் இந்த புகாரை அண்ணா நகர் சைபர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தனர்.

ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது ஆபாச இணையதளங்கள் மாணவர்கள் பார்த்து கெட்டுப்போக வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close