Uncategorizedகிரைம்சேலம்தமிழ்நாடுமாவட்டம்

சேலத்தில் விஷம் கொடுத்து 2 சகோதரர்கள் கொலை – சாலையோரத்தில் உறங்கும் இடத்தை பிடித்ததால் போதை ஆசாமி ஆத்திரம்

சாலையோரத்தில் உறங்கும் இடத்தை பிடிக்கும் விவகாரத்தில், அண்ணன், தம்பியை விஷம் கொடுத்து கொலை செய்த போதை ஆசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை கணபதி நகரில் வசிந்த வந்த பட்டாபிக்கு ஓபுளி, மாதேஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நெசவு தொழில் செய்து வந்த இவர்கள், கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவித்து வந்தனர்.

மகன் மாதேசுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்குள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு இரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் தங்கியுள்ளனர்.
தந்தை பட்டாபி மற்றும் அவரது மகன்கள் ஓபுளி, மாதேஸ் ஆகிய 3 மூவருக்கும் வேலை எதுவும் இல்லாததால், மருத்துவமனைக்கு அருகே உள்ள தலைவெட்டி முனியப்பன் கோவில் பகுதியில் தங்கியிருந்தனர். யாரேனும் உணவு உள்ளிட்டவை கொடுத்தால், அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு அவர்கள் அங்கேயே இருந்துள்ளனர்.
இந்த நிலையில் மகன்கள் ஓபுளி, மாதேஷ் ஆகியோர் கோவில் முன்பு மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு பட்டாபி அதிர்ச்சியடைந்தார். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார், தந்தை பட்டாபிராமனிடம் விசாரித்த போது, அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் தன்னிடம் குளிர்பான பாட்டில் கொடுத்தாகவும், அதை இரண்டு மகனுக்கும் கொடுத்தாக கூறினார். இந்த குளிர்பானத்தை குடித்த போதுதான் இரண்டு மகன்களும் மயங்கி உயிரிழந்து விட்டதாக பட்டாபிராம் தெரிவித்தார்.
இதனையடுத்து, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது தான், மர்மநபர் ஒருவர் குளிர்பானம் கொடுத்தது தெரியவந்தது.
மர்மநபரை தேடி வந்த நிலையில், மருத்துவமனை அருகே போதையில் இருந்த செல்வகுமார் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இரண்டு வாலிபர்களுக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், வழக்கமாக தூங்கும் இடத்தை, இருவரும் பிடித்துக் கொண்டதால், அவர்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக செல்வகுமார் கூறியது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close