இந்தியாகவர் ஸ்டோரி

பஞ்சாப்பில் தொழிலாளர்கள் உள்பட 86 பேர் பலி – ஒரே மாவட்டத்தில் 63 பேர் உயிரிழந்த பரிதாபம்

பஞ்சாபில் விஷச் சாராயம் குடித்த தொழிலாளர்கள் பலர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 86 பேர் பலியான நிலையில், டான் டரன் மாவட்டத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க, இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமல் படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநிலத்திலும் பல பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச் சாராயம் விற்பனை சில மாவட்டங்களில் சூடு பிடித்துள்ளது. மதுபானங்களின் விலை அதிகமாக உள்ளதால், கள்ளச் சாராயத்தை தொழிலாளர்கள் நாடியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை கள்ளச் சாராயம் குடித்த 5 தொழிலாளர்கள் திடீரென உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 47 பேர் உயிரிழந்தனர். பலரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

விஷம் கலந்த மதுவை அருந்தியதால் மரணங்களுக்கு வழிவகுத்தாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில், விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. அதில், டான் டரன் மாவட்டத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவனக்குறைவாக இருந்ததாக கலால்துறை அதிகாரிகள் 7 பேர் மற்றும் போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close