அரசியல்இந்தியா

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது – முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை, புதுச்சேரியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இதனை ஏற்றுகொள்ள முடியாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆகவே புதுச்சேரி மருத்துவர்களை சென்னைக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டு அந்த சிகிச்சை முறைகளை புதுச்சேரியிலும் பின்பற்ற உத்தரவிட்டுள்ளோம்.

மேலும் புதுச்சேரியில் ஆயூஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு சித்த மருத்துவ முறையில் மருத்துவம் பார்க்க விரும்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து செய்துள்ளோம். இது விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்த முதல்வர் நாராயணசாமி.

பின் புதிய தேசிய கல்வி கொள்கையை பற்றி பேசினார். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையானது பல்வேறு குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கட்டாய கல்வியாக மும்மொழி திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது மக்களுக்கு பயன்படாது எனவும், இந்த புதிய கல்வி கொள்கை மூலம் புதுச்சேரியில் மிக பெரிய மாற்றம் வரும் என நம்பவில்லை என்றும்; மத்திய அரசின் இந்த திட்டம் சமஸ்கிருத்தத்தை திணிப்பதாக இருப்பதால் இதனை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி அரசின் கொள்கை இரு மொழி கொள்கை. ஆகவே புதிய கல்வி கொள்கை குறித்து புதுச்சேரி மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தை கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close