தமிழ்நாடு

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருத்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், உள்ளிட்ட கல்வியாளர்கள் பங்கேற்றனர்.காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களின் கருத்துக்களை ஸ்டாலின் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் மாணவர்களின் நலனுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கை உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close