சினிமாபொழுதுபோக்கு

மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் திணறல்!

கடந்த 2013ஆம் ஆண்டு, ஒரு மலையாள படம் மூலமாக திரை உலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன் பின் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த இவர்,

கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்டை’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

குறுகிய காலத்திலே அதிக ரசிகர் வட்டாரத்தை கொண்ட மாளவிகா மோகனன், தளபதி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘ஹீரோ’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் தெலுங்கு சினி உலகிற்கும் அறிமுகவுள்ளார்.

இதனிடையே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் இவர், அதனை தனது இஸ்டாகிராமிலும் பகிர்ந்து வருகிறார். அவரது இன்ஸ்டாக்ராமை 1.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தன்னை ராஜா காலத்து இளவரசி போல் அலங்கரித்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டு லட்ச கணக்கான லைக்ஸுகளை பெற்றுள்ளார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close