இந்தியாகர்நாடகாகல்வி வேலை வாய்ப்புவைரல்

பிள்ளைகளின் படிப்பிற்காக தாலியை விற்று டி.வி. வாங்கிய தாய் – கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

பிள்ளைகளின் படிப்பிற்காக, தாய் ஒருவர் தனது தாலியை விற்று டி.வி. வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தில் வசித்து வரும் கஸ்தூரிக்கு, ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பம் வறுமையில் வாடியதால், கிடைத்த வேலைகளை செய்து குழந்தைகளை வளர்த்து வந்தார் அவர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அன்றாட செலவுக்கே கையேந்தும் நிலைக்கு கஸ்தூரி தள்ளப்பட்டார்.

மேலும், பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளதால், வீட்டில் தொலைக்காட்சி இல்லாமல் குழந்தைகள் படிப்பு வீணாகி போய்விடும் என்று அவர் வேதனை அடைந்தார்.

இதனையடுத்து, தொலைக்காட்சி பெட்டியை வாங்க முடிவு செய்த கஸ்தூரி, தெரிந்தவர்களிடம் பணத் கேட்க முடிவு செய்தார். ஆனால் பணம் எங்கும் கிடைக்காததால், தனது தாலியை விற்க தயாரானார்.

அதில் வரும் பணத்தைக் கொண்டு தொலைக்காட்சி பெட்டியையும் அவர் வாங்கினார். தனது தாலியை விட குழந்தைகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்று தாய் கஸ்தூரி மகிழ்ச்சியுடன் கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close