கவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை தனியார் மருத்துவமனையில் திடீர் அனுமதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை தனியார் மருத்துவமனையில் திடீர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் குறைந்து வரும் நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நோய் தொற்று பரவியது. 147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர் உள்பட 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நோய் தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆளுநர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர்கள் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆளுநர் வளாகத்தில் செயல்பட்ட அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன.

 

இதனிடையே, உதவியாளர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்தனர். ராஜ்பவனில் கொரொனா தொற்று பரவியுள்ள நிலையில், தமிழக ஆளுநர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close