கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் குறைந்து வரும் நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நோய் தொற்று பரவியது. 147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர் உள்பட 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நோய் தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆளுநர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர்கள் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆளுநர் வளாகத்தில் செயல்பட்ட அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன.

இதனிடையே, உதவியாளர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை மேற்கொண்டதில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நோய்க்கான அறிகுறி இல்லாததால், வீட்டில் தனிமைப்படுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தன்னை தானே ஆளுநர் பன்வாரிலால் தனிமைப் படுத்திக்கொண்டார்.

Related Articles

8 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button